விஜய் ஆண்டனி தயாரிக்கும் ‘பூக்கி’ படத்தின் ‘புடிக்கலே’ என்ற பாடல் வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பூக்கி’. இந்தப் படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், முன்பு சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான அஜய் தீஷன் நடித்துள்ளார். ‘சலீம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா, இந்த ‘பூக்கி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தோன்றியுள்ளார்.

2K தலைமுறை காதலர்களின் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து, நகைச்சுவை கலந்த பரபரப்பான திரைக்கதையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘புடிக்கலே புடிக்கலே’ என்ற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்த ‘பூக்கி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading