மக்கள் அதிகமான வன்முறையை காட்சிப்படுத்தும் படங்களை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து நடித்துத் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘கூலி’. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் ‘கூலி’ படம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், ‘கூலி’ திரைப்படம் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மனம்திறந்து பதிலளித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ திரைப்படம் நாளை (பிப். 6) வெளியாக உள்ள நிலையில், இதையொட்டி அவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ‘கூலி’ படம் குறித்து பேசினார்.

‘உங்களுக்கு கூலி படம் பிடித்ததா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், படத்தின் கடைசி 10 நிமிடங்கள், குறிப்பாக ‘டி-ஏஜிங்’ பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தலைவர் ரஜினிகாந்தின் ரசிகையாக, அவரை இன்னும் அதிகமாக திரையில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு படம் பிடித்திருந்தது, அதேசமயம் இப்போதெல்லாம் மக்கள் அதிகமான வன்முறையை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். ‘கூலி’ படம் குறித்து மேலும் விரிவாக பேச விரும்பவில்லை, ஏனெனில் பல சிறந்த படங்களை வழங்கிய லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading