பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் பவன் கல்யாண், சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பே அவரது நடிப்பில் ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத் சிங் ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தன.

துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர், பல மாதங்களாக அவர் திரைப்படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். இருப்பினும், தயாரிப்பாளர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஹரிஹர வீர மல்லு, ஓஜி, உஸ்தாத் பகத் சிங் ஆகிய படங்களின் மீதமிருந்த படப்பிடிப்புகளை முடித்து வழங்கினார். இதில் ஹரிஹர வீர மல்லு மற்றும் ஓஜி படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வெளியாகின.

உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ள இந்த படம், வருகிற மார்ச் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading