நடிகர் அர்ஜுன் கடைசியாக விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கிய ‘சீதா பயணம்’ திரைப்படம் வெளியான நிலையில், அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனிடையே அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது.தற்போது தெலுங்கு இயக்குநர் டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கும் புதிய திரைப்படத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், அர்ஜுனின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
