கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர் நடிகை அக்ஷயா போபையா. பிரபல தொலைக்காட்சி தொடரான ‘கண்ணான கண்ணே’ மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான இவர், தொடர்ந்து ‘சீதா ராமன்’ மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் சீரியல்கள், பாடல்கள் என தொடர்ந்து பிஸியாக இயங்கி வருகிறார். இந்நிலையில், நடிகை அக்ஷயா தனது சொந்த உழைப்பில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Add a Comment
