Advertisement

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பப் பின்னணியிலான கதையில் சூர்யா நடித்திருப்பதால், படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

‘சஞ்சய் விஸ்வநாத்’ என்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளை உள்ளடக்கிய இப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ‘ஃபீல் குட்’ திரைப்படமாக அமைந்துள்ளது.

படத்திற்கு கிடைத்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்காக நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு நீங்கள் காட்டிய அனைத்து அன்பு, மரியாதை மற்றும் பாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் தொடர்ந்துb ஓடிக்கொண்டு உள்ளது‌‌.

Add a Comment

Leave a Reply