ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது மற்றும் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. ‘தெய்வ திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், இந்நிலையில் ரன்வீர் சிங்கின் ஜோடியாக நடித்துள்ளார். மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஆபரேஷன் லியாரி மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பு ரா மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த ஸ்பை திரில்லர் படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும், உலகம் முழுவதும் ரூ.1300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்குகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, இதன் கதையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் வெற்றியை தொடர்ந்து, ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில், ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் ஜியோ ஸ்டியோஸ் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த படம் வருகிற மார்ச் 19ம் தேதி உலகளவில் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
