நடிகர் யஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் “டாக்சிக்”. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது. இந்த படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. நீண்ட காலமாக நடப்பில் இருந்த படமாக இருந்த போதிலும், “டாக்சிக்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு ரசிகர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப். 2 படத்தின் பிரமாண்ட வெற்றியின் பின்னர் நடிகர் யஷ் நடிக்கும் படமாகும் என்பதால், “டாக்சிக்” படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் “துரந்தர் தி ரிவெஞ்ச்” படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பான் இந்தியா அளவில், கே.ஜி.எஃப். 2 மற்றும் துரந்தர் படங்கள் வசூலில் ரூ.1000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், யஷ் நடிக்கும் “டாக்சிக்” மற்றும் ரன்வீர் சிங் நடிக்கும் “துரந்தர் தி ரிவெஞ்ச்” ஒரே நாளில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இரு திரைப்படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
