இயக்குநர் ராம் கிளாப் அடித்து தொடங்கி வைத்த ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு!

நடிகர் ஏகன், ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போன்ற படங்களால் பிரபலமானவர், அடுத்து நடிக்கும் படம் “ஹைக்கூ”. இதனை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பாளராக பணியாற்றுகின்றனர்.

இதில் தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி மற்றும் மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் தோற்றம் கடந்த டிசம்பரில் வெளியானது. தற்போது படப்பிடிப்பு இடுக்கியில் தொடங்கியுள்ளது.

இயக்குநர் ராம் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். அதே நேரத்தில், படப்பிடிப்பு தொடங்குமுன் இதன் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading