ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ஜிவி.பிரகாஷின் ‘லக்கி’ திரைப்படம்!

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “லக்கி” திரைப்படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம், அரசியல் குழப்பங்களால் காணாமல் போன தனது நாயைத் தேடி அலைந்தும், அதனை மீட்டெடுக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் உடன் அனஸ்வரா ராஜன், மேக்னா சுமேஷ், இளங்கோ குமரவேல், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தான். தயாரிப்பாளர்களாக கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்பதால், படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இந்த மாதத்திலேயே ஒவ்வொன்றாக வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading