யு/ஏ சான்றிதழ் பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘வித் லவ்’

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், கதாநாயகனாக முதன்முறையாக அறிமுகமாகி நடித்துள்ள திரைப்படம் ‘வித் லவ்’. இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் அவரின் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை நடிகை சவுந்தர்யா ரஜினி அவரின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இணை தயாரிப்பாளரான மகேஷ் ராஜ் பசிலன் அவரின் எம்.ஆர்.பி எண்டெர்டெயிமென்ட் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளார். ‘வித் லவ்’ திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் நீளம் மொத்தமாக 2 மணி நேரம் 21 நிமிடங்கள்  என தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading