சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிட்டா, அயலி மதன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் நடிக்கும் புதிய படம் “டார்க் ஜெயின்ட்”. இதில் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை கே.எஸ்.கிஷன் இயக்குகிறார். இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் சங்கீத்மணி கோபால், தயாரிப்பாளர் லோகேஸ்வரன் (பயோவன் கிரியேஷனிசம்) ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹாரர் த்ரில்லர் வகை படமாக உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்திலும், சென்னையிலும் முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. ஏப்ரிலில் படம் திரையரங்குகளில் வெளியாகும் திட்டமிடப்பட்டுள்ளது.
