திரைப்படங்களின் ப்ரோமோஷனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற ‘வித் லவ்’ படக்குழு… பெசண்ட் நகர் கடற்கரையில் நடந்த அசத்தலான டிரோன் ஷோ!

தமிழ் சினிமா வரலாற்றில் புதுமையான தருணமாக, “வித் லவ் (With Love)” திரைப்பட குழு சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் தலைப்பும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அந்த நிகழ்வை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

ஜியோன் ஃபிலிம்ஸ் (Zion Films) சார்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் (MRP Entertainment) இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரித்துள்ளனர். இப்படத்தை “டூரிஸ்ட் ஃபேமிலி” இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார், அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் உலகமெங்கும் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.

பட வெளியீட்டின்போது படக்குழு பல புதுமையான விளம்பர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் ஒன்று, சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட டிரோன் ஷோ. தமிழ் சினிமாவில் திரைப்பட விளம்பரத்திற்காக டிரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வானில் மின்னும் எழுத்துகளாக “With Love” தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தியது. இப்படத்தில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்தனர். இது சினிமா விளம்பரத்தைத் தாண்டி, ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது. அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் K.சுரேஷ் குமார் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading