25 வருடங்களை நிறைவு செய்த ‘மின்னலே’ திரைப்படம்… பிப்ரவரி 13ம் தேதி ரீ ரிலீஸ்!

‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக் நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் வெளியான உடனேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றாக ‘மின்னலே’ திகழ்கிறது. இந்த படம் பிப்ரவரி 2, 2001 அன்று திரையரங்குகளில் வெளியாகியது.

இந்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ், தமிழ் திரையிசை உலகையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். படத்தில் இடம்பெற்ற ஒன்பது பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அதேபோல், பின்னணி இசையும் தீம் இசைத் துணுக்குகளும் கூட தனித்துவமாக இருந்து ரசிகர்களை கவர்ந்தன. இதற்கு முன்பே சில திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருந்த தாமரை, இந்த படத்தில் எழுதிய ‘வசீகரா’, ‘இவன் யாரோ’ போன்ற பாடல்களின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இந்த படத்திற்குப் பிறகு கவுதம் வாசுதேவ் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் – தாமரை கூட்டணி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்தது.

இந்த நிலையில், நேற்று ‘மின்னலே’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை கொண்டாடும் வகையில், ‘மின்னலே’ திரைப்படம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading