Advertisement

‘டோரதி’ படத்தின் ஸ்பாயிலர் டிரெய்லர்-ஐ வெளியிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது கார்த்திக் சுப்பராஜின் 10-வது திரைப்படமாகும்.

மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்களையும் மையமாக வைத்து உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ரிஷிகாந்த் மற்றும் சனந்தின் நடிப்பு கவனம் பெற்றுள்ளது. மேலும், சமூக ஊடகங்களிலும் படத்தின் மையக்கருத்து தொடர்பாக பல்வேறு விவாதங்கள் உருவாகியுள்ளன.

இந்நிலையில், படம் வெளியாகி சுமார் இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ‘டோரதி’ படத்தின் ஸ்பாயிலர் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ஸ்பாயிலர் டிரெய்லர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply