நடிகர் சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

‘கூகுள் குட்டப்பா’, ‘கார்டியன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய குரு சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘பத்து நாள் ராஜா’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் சதீஷ் மற்றும் நடிகர் ஆதி சாய்குமார் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகியாக மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகை சரண்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதனைத் தவிர, சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றுகிறார். நேற்று, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, நடிகர் சதீஷ் மற்றும் கதாநாயகி தொடர்பான காட்சிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அவரது ஒளிப்பதிவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது தனக்கு பெரும் பெருமையையும், மனநிறைவையும் அளிப்பதாக நடிகர் சதீஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading