‘சினிமா என் ரத்தத்தில் கலந்தது’ – மனம் திறந்த ஜான்வி கபூர்!

பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் ஜான்வி கபூர், தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனது திரைப்பயணம் மற்றும் விமர்சனங்கள் குறித்த தனது பார்வையை அவர் பகிர்ந்துள்ளார்.

சினிமா தனது ரத்தத்திலேயே கலந்திருப்பதாக கூறிய ஜான்வி கபூர், தனது தாயார் வழியாக திரைத்துறைக்குள் வந்ததாகவும், தற்போது தனது வாழ்க்கையே சினிமாவாக மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக்கொண்டு வருவதாகவும், கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னைப் பற்றிய நேர்மறையான விமர்சனங்களையும், முன்னேற்றத்துக்கான அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள ஜான்வி, தனிப்பட்ட நோக்கத்துடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களை மட்டும் பொருட்படுத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும், அதற்கேற்ற கதைகளைத் தேர்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். தன்னைப் பற்றி உண்மையாக அறிந்தவர்களுக்கு தான் யார் என்பது தெரியும் என்பதால், தேவையற்ற விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading