Advertisement

சூர்யாவின் ‘சீன்’ பட முதல் பாடல் வெளியானது – கவனத்தை ஈர்க்கும் ‘ஆத்தி இவ யார்ரா ’!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தை ‘ஆவேஷம்’ புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘சீன்’, சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பிலும் தயாரிக்கப்படுகிறது.

‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி யார்ரா இவ’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜ்பிரியன் எழுதி பாடியுள்ள இந்தப் பாடல், படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply