Advertisement

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடித்துள்ள ‘ரணபலி’ டிரெய்லர் வெளியீடு!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘ரணபலி’. ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. தனது மக்களை காப்பாற்ற போராடும் புரட்சிகர வீரனை மையமாகக் கொண்ட இப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்க, அஜய் – அதுல் இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில், ‘ரணபலி’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply