இயக்குனராக அறிமுகமாகும் பிரபல எழுத்தாளரான தமிழ்ப் பிரபா!

‘பேட்டை’, ‘கொசலை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவராக அறியப்படும் தமிழ்ப் பிரபா, தமிழ் சினிமாவில் கதையாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் முக்கிய பங்களிப்பு அளித்தவர். ‘சார்பட்டா பரம்பரை’, ‘ப்ளூ ஸ்டார்’, ‘காந்தா’, ‘தங்கலான்’, ‘சொர்க்கவாசல்’ போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களுக்கு இவர் கதை மற்றும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக திரைத்துறையில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வந்த தமிழ்ப் பிரபா, தற்போது இயக்குநராக புதிய அவதாரம் எடுக்கத் தயாராகி வருகிறார். அவர் இயக்கும் முதல் திரைப்படம் தொடர்பான பணிகள் ஆரம்ப நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய படத்தில் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading