சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படத்தில் இணைந்த சிவானி ராஜசேகர்!

‘கொம்புசீவி’ திரைப்படத்தைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் தனது அடுத்த படமாக ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகனான அவர், இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் சந்திக்க தயாராகியுள்ளார்.

இயக்குநர் திரு இயக்கும் இந்தப் படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரித்து வருகிறார். சென்னை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை அண்மையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் மூலம், நடிகை சிவானி ராஜசேகர் கதாநாயகியாக இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading