நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

புதிய கதைக்களங்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் நிவின் பாலி, தற்போது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையரங்குக்கு வருகிறார். ‘பிரேமலு’ படத்தை இயக்கிய கிரீஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியிருப்பதால், ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் மீது அதிக கவனம் திரும்பியுள்ளது..

ஃபகத் ஃபாசிலும் திலீஷ் போத்தனும் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் மமிதா பைஜூ, ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்பத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் வலுவான நட்சத்திரக் கூட்டணி இடம்பெற்றிருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், விஷ்ணு விஜய் இசையமைப்பில் உருவான ‘மாந்திரீகம்’ என்ற முதல் பாடல் இன்று (ஜூலை 24) மாலை ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading