‘துடரும்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அந்தப் படத்தை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் உருவாகி வருகிறது. இது மோகன்லாலின் 366-வது திரைப்படமாகும் என்பதால், ரசிகர்களிடையே இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மான் தயாரித்து வருகிறார். மேலும், நடிகை மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மோகன்லாலின் 366-வது திரைப்படத்தில் அவர் டி.எஸ். லவ்லஜன் என்ற காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மோகன்லால் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிப்பது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
