சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துப் பெரும் வரவேற்பை பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தற்போது ‘வித் லவ்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ‘வித் லவ்’ திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழுவினர் தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் நடிகை அனஸ்வரா ராஜன் இந்தப் படம் குறித்து மனம் திறந்து பேசினார்.
அவர் கூறுகையில், “என் திரை வாழ்க்கையில், கதை கேட்ட முதல் நாளிலேயே எந்தவிதமான யோசனையும் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே திரைப்படம் ‘வித் லவ்’ தான். இந்தப் படத்தை நான் முழுமையாக பார்த்துவிட்டேன். இது ஒரு அழகான காதல் படம். நாங்கள் இந்த திரைப்படத்தை ‘காதலுடன்’ உருவாக்கியுள்ளோம், அதையே ‘காதலுடன்’ ரசிகர்களுக்கு வழங்குகிறோம்” என்று அனஸ்வரா ராஜன் தெரிவித்துள்ளார்.
