தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் நடிகை கோமலி பிரசாத்!

சரண்ராஜ் இயக்கத்தில் நடிகை கோமலி பிரசாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த படம் தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமானதும், புதியதுமான அத்தியாயம் என்றும் கோமலி பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் அன்பும் ஆசீர்வாதமும் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்ணை மையமாகக் கொண்டு உருவாகும் கதையாக ‘மண்டவெட்டி’ திரைப்படம் தயாராகி வருகிறது. தற்போது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தொடக்கத்திலிருந்தே இந்த படம் குறித்து நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம், கோமலி பிரசாத்தின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையவுள்ளது. ஏற்கனவே அவர் ‘நெப்போலியன்’, ‘ரவுடி பாய்ஸ்’, ‘செபாஸ்டியன் பிசி 524’, ‘ஹிட் செகண்ட் கேஸ்’, ‘ஹிட் 3’, ‘சஷிவதானே சித்தலு’ உள்ளிட்ட பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துப் பாராட்டுகளை பெற்றுள்ளார். தற்போது ‘மண்டவெட்டி’ மூலம் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்பு திறமையை உறுதியாக நிரூபிக்கத் தயாராகி வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading