நடிகர் பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு, தனித்துவமான கதைகளில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். அந்த வகையில், அவரது 25வது திரைப்படமான ‘சிறை’ படம் அவருக்கு சிறந்த பெயரையும், நல்ல வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது.
இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு, அதனை பார்த்த பலரும் படத்தையும், விக்ரம் பிரபுவின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர். இத்திரைப்படத்தில் அறிமுக நடிகரான அக்ஷய்குமாருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. இருந்தாலும், அந்தப் படத்தில் விக்ரம் பிரபு தனது நடிப்பால் தனக்கான அடையாளத்தையும், பாராட்டையும் எந்த விதத்திலும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு விக்ரம் பிரபு நடித்த ‘இறுகப்பற்று’ மற்றும் ‘டாணாக்காரன்’ ஆகிய திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. 2025 ஆம் ஆண்டு அவர் நடித்த ‘லவ் மேரேஜ்’ என்ற தமிழ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும், அவரது நடிப்பு கவனிக்கப்பட்டது. தெலுங்கில் அவர் அறிமுகமான ‘காட்டி’ திரைப்படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அவரது 25வது படமாக வெளியான ‘சிறை’ திரைப்படம், விக்ரம் பிரபுவுக்கு மீண்டும் நல்ல பெயரும், நிலையான இடத்தையும் பெற்றுத் தந்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
