சிம்புவின் #STR51 படத்தில் நடிக்கிறாரா மிருணாள் தாகூர்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு, ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். சிம்புவின் 51வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ‘காட் ஆப் லவ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இந்த படம் பிரமாண்டமான முறையில் உருவாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading