டூரிங் டாக்கீஸ் ஃபிரேம் & ஃபேம் (FRAME & FAME) 2026-ன் முதல் பதிப்பு, நேற்று சென்னை காமராஜர் அரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த விழாவில், சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து, பிரபல மக்கள் தொடர்பாளர்கள் திரு. சிங்காரவேலு, திரு. ரியாஸ் K அஹ்மத் மற்றும் செல்வி பாரஸ் ரியாஸ் ஆகியோர் இந்த விழாவை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
இயக்குநர் திரு. கே. பாக்யராஜ் அவர்கள் இந்த விருது விழாவிற்கு நடுவர் குழு தலைவராக செயல்பட்டார். இவருடன் குஷ்பு சுந்தர், இளவரசு, T. சிவா, RK. செல்வமணி மற்றும் RV உதயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.









நட்சத்திரங்களின் சங்கமம்
இந்த விழாவில் திரையுலகின் மூத்த மற்றும் இன்றைய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். சிவகுமார், விஜயகுமார், ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர், பொன்வண்ணன், இளவரசு, மணியன் செல்வன், யூகி சேது, ஜெயப்பிரகாஷ், உதயா, ஷீலா, ராஜஸ்ரீ, குமாரி சச்சு, குட்டி பத்மினி, அம்பிகா, பூர்ணிமா, ரேகா, சுகன்யா, தேவயானி ராஜகுமாரன், கே.பி.ஒய் பாலா ஆகியோர் விழாவிற்கு வருகை தந்தனர்.
மேலும், ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் தாஸ், மணிகண்டன், ஹர்ஷத் கான், எல்.கே. அக்ஷய் குமார், சிம்ரன், ஐஸ்வர்யா லெட்சுமி, ஸ்வாசிகா, ரெடின் கிங்ஸ்லி, மாஸ்டர் கமலேஷ் மற்றும் கலை இயக்குநர் தோட்டா தரணி ஆகியோர் விழாவிற்கு மெருகூட்டினர்.
திரையுலகின் பேராதரவு
இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, கே.எஸ். ரவிக்குமார், பி. வாசு, சுரேஷ் கிருஷ்ணா, பி. விக்ரமன், வசந்த் சாய், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம், லிங்குசாமி, மாரி செல்வராஜ், வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா, ராஜ்குமார் பெரியசாமி, தேசிங்கு பெரியசாமி, ரவிக்குமார், சரண், முத்தையா, பொன்ராம், சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் இசையமைப்பாளர்கள் நிவாஸ் கே பிரசன்னா, சாய் அபயங்கர், தயாரிப்பாளர்கள் கலைப்புலி S தாணு, சத்யஜோதி தியாகராஜன், M காஜா மைதீன், LK சுதீஷ், AL அழகப்பன், GKM தமிழ்குமரன், ஆனந்த சுரேஷ், T சிவா, கண்ணன் ரவி, ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா, நிகேத் பொம்மி, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா, பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னா, பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி, பாடலாசிரியர் சூப்பர் சுபு மற்றும் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோரின் வருகை இந்த விருது விழாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்தது.
நம்பகத்தன்மை மற்றும் அனைத்து கலைஞர்களுக்குமான அங்கீகாரம் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்ட இந்த டூரிங் டாக்கீஸ் ஃபிரேம் & ஃபேம் (FRAME & FAME), தமிழ் திரையுலகின் மிக உயரிய வருடாந்திர விருது விழாவாக மாறுவதற்கான வலுவான அடித்தளத்தை இப்போதே அமைத்துவிட்டது.
விருது வென்றவர்களின் முழு விவரம்:
சிறந்த நடிகர் (முதன்மை கதாபாத்திரம்): தனுஷ் (இட்லி கடை)
சிறந்த நடிகை (முதன்மை கதாபாத்திரம்): ஐஸ்வர்யா லெட்சுமி (மாமன்)
சிறந்த அறிமுக நடிகர்: பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்)
சிறந்த அறிமுக நடிகை: சான்வி மேகனா (குடும்பஸ்தன்)
சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி (காந்தா)
சிறந்த துணை நடிகை: ஸ்வாசிகா (மாமன்)
சிறந்த வில்லன் நடிகர்: அர்ஜுன் தாஸ் (குட் பேட் அக்லி)
சிறந்த நகைச்சுவை நடிகர்: ரெடின் கிங்ஸ்லி (குட் பேட் அக்லி)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் கமலேஷ் ஜெகன் (டூரிஸ்ட் ஃபேமிலி)
சிறந்த இயக்குனர்: அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி)
சிறந்த அறிமுக இயக்குநர்: சாரங் தியாகு (ஆரோமலே)
சிறந்த பின்னணி பாடகர்: அந்தோணி தாசன் (என் பாட்டன் சாமி வரும்)
சிறந்த பின்னணி பாடகி: சஞ்சனா கல்மஞ்சே (வழித்துணையே – டிராகன்)
சிறந்த ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி (டிராகன்)
சிறந்த படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே (வீர தீர சூரன் பார்ட் 2)
சிறந்த திரைக்கதை: ராம் (பறந்து போ)
சிறந்த வசனம்: பிரசன்னா பாலச்சந்திரன் (குடும்பஸ்தன்) & அஸ்வத் மாரிமுத்து (டிராகன்)
சிறந்த பாடலாசிரியர்: ராஜு முருகன் (எத்தன சாமி – இட்லி கடை)
சிறந்த பின்னணி இசை: நிவாஸ் கே பிரசன்னா (பைசன்)
சிறந்த நடன அமைப்பு: சாண்டி (கூலி)
சிறந்த சண்டைப்பயிற்சி: கெவின் குமார் (மதராசி)
சிறந்த பப்ளிசிட்டி டிசைன்: கோபி பிரசன்னா (தக் லைஃப்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: பிரவீன் ராஜா (ரெட்ரோ)
சிறந்த ஒப்பனை: ராஜா B (இட்லி கடை)
சிறந்த நிர்வாக தயாரிப்பாளர்: பாலா கோபி
சிறந்த திரைப்படம்: மில்லியனர் டாலர் பிக்சர்ஸ் & எம்.ஆர்.பி என்டர்டைன்மென்ட் (டூரிஸ்ட் ஃபேமிலி)
சிறந்த தயாரிப்பு நிறுவனம்: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (எஸ். லலித் குமார்)
சிறந்த அறிமுக இசையமைப்பாளர்: சாய் அபயங்கர் (ட்யூட்)
இந்த ஆண்டின் சிறந்த நட்சத்திரம் (Star of the Decade): ரவி மோகன்
இந்த ஆண்டின் சிறந்த அறிமுகம் (Find of the Year): எல்.கே. அக்ஷய் குமார்
சிறந்த வளர்ந்து வரும் கலைஞர்: ஹர்ஷத் கான்
இந்த தசாப்தத்தின் ஹிட்மேக்கர்: சுந்தர் சி
நடுவர் குழு விருதுகள் (Jury Awards):
சிறந்த நடிகர் (நடுவர் குழு): மணிகண்டன் (குடும்பஸ்தன்)
சிறந்த நடிகை (நடுவர் குழு): சிம்ரன் (டூரிஸ்ட் ஃபேமிலி)
சிறந்த அறிமுக நடிகர் (நடுவர் குழு): சூர்யா விஜய் சேதுபதி (பீனிக்ஸ்)
சிறந்த அறிமுக நடிகை (நடுவர் குழு): சுஷ்மிதா பட் (லவ் மேரேஜ்)
சிறந்த இயக்குனர் (நடுவர் குழு): மாரி செல்வராஜ் (பைசன்)
சிறந்த அறிமுக இயக்குநர் (நடுவர் குழு): கலையரசன் தங்கவேல் (ஆண் பாவம் பொல்லாதது)
சிறந்த வில்லன் நடிகர் (நடுவர் குழு): எஸ்.ஜே. சூர்யா (வீர தீர சூரன் பார்ட் 2)
சிறந்த திரைப்படம் (நடுவர் குழு): எஸ். வினோத் குமார் (சினிமாக்காரன்) (குடும்பஸ்தன்)
பொற்கால விருதுகள் (Golden Period Awards):
பொற்கால நட்சத்திரங்கள்: ஷீலா, லட்சுமி, காஞ்சனா, ராஜஸ்ரீ, குமாரி சச்சு, குட்டி பத்மினி, வெண்ணிற ஆடை நிர்மலா.
சினிமா பாரம்பரிய விருது (Legacy of Excellence): சிவகுமார் மற்றும் விஜயகுமார்.
பொற்கால எழுத்தாளர்கள்: காரைக்குடி நாராயணன், சித்ராலயா கோபு, வி.சி. குகநாதன், கலைஞானம்.
பொற்கால புகைப்படக் கலைஞர்: ஸ்டில்ஸ் ரவி.
பொற்கால இயக்குநர்: எஸ்.பி. முத்துராமன்.
பொற்கால மக்கள் தொடர்பாளர்கள் (PROs): திரைநீதி செல்வம், வி.பி. மணி, பாரிவள்ளல், நெல்லை சுந்தராஜன், சுரா, இ.வி.ஆர். மோகன்.
பொற்கால நகைச்சுவை நடிகர்: வெண்ணிற ஆடை மூர்த்தி.
கேப்டன் விஜயகாந்த் எக்ஸலன்ஸ் விருது: கோகுலம் கோபாலன் (கோகுலம் ஃபிலிம்ஸ்).









