தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ரவி தேஜாவை, அவரது ரசிகர்கள் அன்புடன் ‘மாஸ் மகாராஜா’ என்றே அழைத்து வருகிறார்கள். ரவி தேஜா நடிப்பில் சமீப காலமாக வெளியான ‘மாஸ் ஜாதரா’ திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.
இந்த நிலையில், ரவி தேஜா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ‘இருமுடி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றி வருகிறார்.
முன்னதாக, விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது ரவி தேஜாவுடன் இணைந்துள்ளதால் ‘இருமுடி’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
