நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்ததாக இயக்குநர்கள் வெங்கட் பிரபு மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் இயக்கத்தில் புதிய படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், சிவகார்த்திகேயன் புதிதாக கன்னட திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளதாகவும், ‘கே.ஜி.எப்’ பாகம் 1, 2, ‘காந்தாரா’ பாகம் 1, 2 மற்றும் ‘சலார்’ போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை கன்னட திரையுலகில் ‘யுவரத்னா’ போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களை இயக்கிய சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த திட்டம் தொடர்பான அனைத்து விஷயங்களும் தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
