அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ ரிலீஸ் வசூல் நிலவரம் என்ன?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து 2011-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜுன் முதன்முறையாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த திரைப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வெளியான போது ‘மங்காத்தா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

இந்த படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ரீ-ரிலீஸை ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். புதிய திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக, ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘மங்காத்தா’ படத்திற்கும் தினந்தோறும் வசூல் குவிந்து வருகிறது.

இந்த சூழலில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நான்கு நாட்களில் ‘மங்காத்தா’ திரைப்படம் உலகளவில் பெற்ற வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த படம் இதுவரை ரூ.17.5 கோடிக்கும் அதிகமான வசூலை உலகம் முழுவதும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.16 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களின் ஓப்பனிங் வசூலில் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் ‘மங்காத்தா’ திரைப்படம் முறியடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading