இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது ‘வார்’, ‘பதான்’ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இந்த நிலையில், ‘கிங்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
