நடிகை திவி வாத்யா. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அவர், சில நாட்கள் மட்டுமே அந்த வீட்டில் இருந்தபோதும், தனது தோற்றம் மற்றும் அணுகுமுறையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்ற திவி வாத்யா, ‘லம்பசிங்கி’, ‘கேப் ஸ்டோரீஸ்’, ‘புஷ்பா 2’, ‘சிம்பா’, ‘ருத்ரங்கி’, ‘ஜின்னா’, ‘நயீம் டைரிஸ்’, ‘காட்பாதர்’, ‘டாக்கு மகாராஜ்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், திருமணம் குறித்த திவி வாத்யாவின் கருத்து தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திவி வாத்யா, திருமணம் குறித்து தனக்கு உள்ள பயத்தை வெளிப்படையாக தெரிவித்தார். திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அது தன்னை பயமுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தனது நட்பு வட்டத்தில் உள்ள திருமணமானவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பிரிந்து விட்டதாகவும், அவர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது திருமணம் என்ற விஷயம் தனக்கு இன்னும் அதிகமாக பயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பலர் தங்களுடைய சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் இழந்து விடுவதாகவும் அவர் கூறினார். திவி வாத்யாவின் இந்த கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
