நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து உருவாக்கி வரும் திரைப்படம் ‘ஸ்பிரிட்’ ஆகும். இந்தப் படத்தில் பிரபாஸ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி, இந்தத் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி உள்ளார்.
இந்தப் படத்தில் பிரபாஷுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதேபோல், கொரிய திரையுலகின் பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமான டான் லீயும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘ஸ்பிரிட்’ திரைப்படம் சர்வதேச அளவிலும் கவனம் பெறும் படமாக உருவாகி வருகிறது.
தற்போது ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிக வேகமாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
