ரசிகர்களை கவர்ந்த ஆண்டனி வர்கீஸ்-ன் ‘காட்டாளன்’ படத்தின் டீஸர்!

‘மார்கோ’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை மலையாள திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய தயாரிப்பாளர் ஷரீப் முஹமது, தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். ‘மார்கோ’ படத்தை தொடர்ந்து, ‘காட்டாளன்’ என்ற புதிய திரைப்படத்தை ஷரீப் முஹமது தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், ரஜிஷா விஜயன், சுனில், கபீர் துஹான் சிங், ராஜ் திரந்தாசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு மொழி ரசிகர்களை கவரும் வகையில் கதையும் கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பான்-இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்திற்கு இசையமைத்து பாராட்டுகளை பெற்ற இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், இந்த ‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading