சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் காண போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தன்னை எப்போதும் நெகிழ வைப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் தான் நமது நாட்டின் உண்மையான முதுகெலும்பு. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே, இந்த நாட்டில் உள்ள மற்ற அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கூறினார். விவசாயிகளின் உழைப்பும் தியாகமும் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ‘ஜெயிலர் 2’ படத்திற்குப் பிறகு அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் கேட்டபோது, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கவுள்ள படம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. அது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading