யூடியூப் தளத்தில் ‘விஜே சித்து விலாக்ஸ்’ மூலம் பரவலாக அறியப்பட்டவர் விஜே சித்து. இவர் தற்போது சினிமாவில் இயக்கி, நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டயங்கரம்’. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை புறநகரில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தை மாதம் முதல் நாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ‘டயங்கரம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் விஜே சித்து, இன்ஜினியரிங் EEE துறையில் பயிலும் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையாத நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமைகளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
