செல்ப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், கே.ஜே. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மாயபிம்பம்’. இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ் மற்றும் அருண் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர்கள் மட்டுமின்றி, இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களாக இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.
இந்த திரைப்படத்திலிருந்து ‘எனக்குள்ளே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர். 2005-ம் ஆண்டில் நடைபெறும் ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலைக் கண்டு படக்குழுவை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘மாயபிம்பம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
