நடிகர் அமீர்கான் தயாரிப்பில் சாய் பல்லவி நடித்துள்ள ‘ஏக் தின்’ படத்தின் முக்கிய அப்டேட்-ஐ வெளியிட்ட படக்குழு!

‘பிரேமம்’, ‘அமரன்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘பிடா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் காரணமாக, ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனிப்பட்ட பாராட்டுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் அமீர்கான் தயாரிப்பில் உருவாகும் ‘ஏக் தின்’ என்ற புதிய திரைப்படத்தின் மூலம் சாய் பல்லவி பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இயக்குநர் சுனில் பாண்டே இயக்கும் இந்த படத்தில், நடிகர் ஜுனைத் கான் நாயகனாக நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ராம் சம்பத் இசையமைத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ‘ஏக் தின்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதேபோல், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏக் தின்’ திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading