சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கொடுத்த அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து, அதனுடன் கடவுள் நம்பிக்கைகள் மற்றும் சமூக கருத்துக்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தொடர்பாக புதிய தகவலை இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இன்று பொங்கல் வாழ்த்து போஸ்டர் எதுவும் வெளியாகாது. ‘கருப்பு’ படத்தின் இரண்டாவது பாடலுடன் சேர்ந்து ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும். எப்போது வெளியானாலும், ‘கருப்பு’ படம் உங்களெல்லாருக்கும் பிடிக்கும் வகையில்தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading