நடிகர் தனுஷ் தற்போது ‘போர் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தனுஷின் 54-வது திரைப்படமாக உருவாகி வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ், ஜெயராம், சுராஜ் வென்ஜரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், தை பொங்கல் தினத்தை முன்னிட்டு தனுஷின் 54-வது படத்திற்கு ‘கர’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் எமோஷனல் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதாக இயக்குனர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் 2026 கோடை காலத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
