கல்ட் கிளாசிக் படமான ‘தும்பட்’ பட இயக்குனரின் ‘மாயசபா’… வைரலாகும் டீசர்!

‘தும்பட்’ என்ற கல்ட் கிளாசிக் திரைப்படத்தின் மூலம் தனித்துவமான அடையாளத்தை பெற்ற இயக்குனர் ரஹி அனில், தற்போது ரசிகர்களுக்காக இன்னொரு புதிய படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் இயக்கியுள்ள இந்த புதிய திரைப்படத்திற்கு ‘மாயசபா – தி ஹால் ஆப் இல்லுஷன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தும்பட்’ படத்தில் காணப்பட்டதைப் போலவே, இந்த படத்திலும் வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தனிச்சிறப்பு கொண்ட ஒரு கற்பனை உலகம் உருவாக்கப்பட்டுள்ளதாக டீசர் வெளிப்படுத்துகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாவேத் ஜாபேரி, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் புதிய அவதாரத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்த உள்ளார். அவருடன் இணைந்து வீணா ஜம்கர், தீபக் டாம்லே, முகமது சமத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading