அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தின் ரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!

2011 ஆம் ஆண்டு நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் ஆகியோர் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை பெற்றது. இன்ஸ்பெக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜித், இதற்கு முன் காணாத வகையில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்ட குற்றச்சாட்டில் அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார். அதன் பின்னர் அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அந்த கும்பல் 500 கோடி ரூபாய் பணத்தை கடத்த திட்டமிடுகிறது. அந்த திட்டத்தில் உதவுவதாக அஜித் கூறுவதும், அதன் பிறகு நிகழும் சம்பவங்களுமே படத்தின் கதைக்களம்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். குறிப்பாக, படத்தின் பின்னணி இசை ரசிகர்களை மிரளச் செய்யும் வகையில் அமைந்திருந்தது. அதேபோல், படத்தில் இடம்பெற்ற ஸ்டண்ட் காட்சிகளும், நடிகர் அஜித் ஒற்றை சக்கரத்தில் பைக் ஓட்டும் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

இந்த நிலையில், ‘மங்காத்தா’ திரைப்படம் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இன்று ‘மங்காத்தா’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே அஜித்தின் ‘அட்டகாசம்’ திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், ‘அமர்க்களம்’ திரைப்படமும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading