‘தகராறு’, ‘வீர சிவாஜி’, ‘தேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கணேஷ் விநாயகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் அருள்நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், கிருத்திகா பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று இந்த படத்திற்கு ‘அருள்வான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக, முதல் பார்வை போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுகிறார்.
‘அருள்வான்’ திரைப்படத்தை ‘90 பிக்சர்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல் பார்வை போஸ்டரைப் பார்க்கும் போது, இந்த படம் ‘தேன்’ திரைப்படத்தைப் போலவே மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதென உணர்த்துகிறது. மேலும், இப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
