52 வயதிலும் தான் நடனம் ஆட முடிவதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன் – நடிகை மலைக்கா அரோரா!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் மலைக்கா அரோரா. 52 வயதான மலைக்கா அரோரா, திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் தனது அழகான தோற்றம் மற்றும் உடல் கட்டமைப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனைத் தவிர, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்ட அவர், தொடர்ந்து யோகா மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து, பலருக்கு ஊக்கமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், திரைப்படங்களில் தனிப்பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆடுவது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு டிரோல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, “உங்கள் இளமைக்கு காரணம் என்ன?” என்ற கேள்வியுடன் விமர்சனங்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து அளித்த பேட்டியில் மலைக்கா அரோரா, 52 வயதிலும் தான் நடனம் ஆட முடிவதை ஒரு பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார். நடனம் என்பது உண்மையாக ரசித்து வெளிப்படுத்த வேண்டிய ஒரு கலை வடிவம் என்றும் அவர் கூறினார். மேலும், நடிகர் அர்ஜூன் கபூர் தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவர் என்றும், அவர் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பார் என நம்புவதாகவும் கூறினார். கடந்த கால விஷயங்களை குறித்து அதிகமாக பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், நடிகர் அர்பாஸ் கானுடன் பிரிந்த பிறகு, தன்னைவிட 12 வயது இளையவரான அர்ஜூன் கபூருடன் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்த மலைக்கா அரோரா, கடந்த ஆண்டு கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரிடமிருந்து பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading