நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ரசகுல்லா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார்.
முழு பாடல் வெளியாகும் முன்பே வெளியிடப்பட்ட ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. தற்போது வெளியாகியுள்ள முழு பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பல்வேறு டிஜிட்டல் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம், லோகேஷ் கனகராஜின் முன்னாள் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் துள்ளலான இசையுடன் உருவாகியுள்ள ‘ரசகுல்லா’ பாடல் தற்போது யூடியூப் மற்றும் ரீல்ஸ் தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ‘ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
