‘கர’ படத்தில் கரசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ்… வைரலாகும் கதாபாத்திர அறிமுக வீடியோ!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் 54-வது திரைப்படத்தை, ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘கர’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட டைட்டில் வீடியோவில் நடிகர் தனுஷ் பேசும், “பயிரோ, களையோ, பாவமோ, புண்ணியமோ அவன் அவன் விதைத்ததைத்தான் அவன் அவனே அறுவடை செய்ய வேண்டும். நான் விதைத்ததை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன் என் மீது படிந்த கறையை துடைக்க வேண்டும். என்னை நம்பி இருப்பவர்களை கரை சேர்க்க வேண்டும். என் பெயர் கரசாமி. என்னை ‘கர’ என்று கூப்பிடுவார்கள்” என்ற வசனம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘கர’ திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனுடன் வெளியான டைட்டில் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading