நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் கூட்டணியில் பான் இந்திய அளவில் உருவாகும் புதிய திரைப்படத்தை சார்மி கவுர் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
