தெலுங்கு திரையுலகில் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில், நடிகர் சிரஞ்சீவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மன ஷங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும், நடிகை கேத்ரின் தெரசா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், நடிகர் வெங்கடேஷ் டகுபதி சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.
இந்த திரைப்படம் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் இப்படம் கவனம் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் வெளியான இரண்டு நாட்களிலேயே உலகளவில் ரூ.120 கோடியை தாண்டிய வசூலை பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், பொங்கல் பண்டிகை முடிவடைவதற்குள் இப்படம் ரூ.250 கோடி வசூலை குவிக்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
