சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற மாரி செல்வராஜின் ‘பைசன்’ திரைப்படம்!

சர்வதேச அளவில் திரைப்பட விமர்சனங்களுக்காக புகழ்பெற்ற லெட்டர்பாக்ஸ்டு (Letterboxd) தளம் வெளியிட்டுள்ள இந்தாண்டிற்கான டாப் 10 ஆக்சன் / அட்வென்சர் திரைப்படங்களின் தரவரிசைப் பட்டியலில், ஒரே தமிழ் திரைப்படமாக ‘பைசன் காளமாடன்’ இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 7வது இடத்தில் ‘லோகா’ மற்றும் 8வது இடத்தில் ‘துரந்தர்’ ஆகிய இந்திய திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துத் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பைசன்’. இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அவரின் போராட்டங்களையும் சாதனைகளையும் நுணுக்கமாக சித்தரித்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் சிறப்பான வசூலை குவித்தது.

‘பைசன்’ திரைப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி கருத்துகளை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், சர்வதேச திரைப்பட விமர்சன தளமான லெட்டர்பாக்ஸ்டு வெளியிட்டுள்ள இந்தாண்டிற்கான டாப் 10 ஆக்சன் / அட்வென்சர் திரைப்படங்களின் பட்டியலில், 5வது இடத்தில் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ஒரே தமிழ் படமாக இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading